தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய லேசான மழையும் நாளை முதல் 6ம் தேதி வரை தமிழகத்தில் உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். அந்தமான் கடல் பகுதி நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற்றுள்ளது எனவும் இது மேலும் வலுவடைந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்தமான் கடல் மற்றும் குமரி கடல் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இரு நாட்களுக்கு அங்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.






