தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது..!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 8 ரூபாய் குறைந்து 33 ஆயிரத்து 824 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது. இன்று ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 8 ரூபாய் குறைந்து 33 ஆயிரத்து 824 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 228 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை 10 காசு உயர்ந்து 71 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 100 ரூபாய் உயர்ந்து 71 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.






