அமெரிக்கா ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது..!
பல்வேறு சோதனைகளுக்குப் பின்னர் அமெரிக்கா ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவுக்கு மனிதர்களை அழைத்துச் செல்வதற்கான ஸ்டார்சிப் எஸ்10 உருவாக்கும் முயற்சியில் எலான்மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஈடுபட்டுவந்தது.
பல்வேறு தோல்விகளுக்கும் மத்தியில் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. ஆகாயத்தில் 10 கிலோ மீட்டர் தூரம் பயணம் சென்ற நிலையில் மீண்டும் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.
இதையடுத்து 2023 ஆம் ஆண்டு மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்லும் திட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் விண்கலம் ஏவப்பட்ட நிலையில் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கண்டுகளித்துள்ளனர்.






