மனைவியின் தங்கையை திருமணம் செய்து வைப்பதாக கூறி ஒரு கோடியே 28 லட்சம் ரூபாயை ஏமாற்றிய நபர்..!
திண்டுக்கல் மாவட்டம் முத்துபழனி ஊரில் மனைவியின் தங்கையை திருமணம் செய்து வைப்பதாக கூறி பைனான்சியரிடம் ரூபாய் ஒரு கோடியே 28 லட்சம் மற்றும் 45 பவுன் நகையை ஏமாற்றிய நபரை குடும்பத்தோடு போலீசார் கைது செய்துள்ளனர்.
வடமாநிலங்களில் வட்டி தொழில் செய்து வரும் பாலசுப்பிரமணி வருமான வரி ஏய்ப்புகாக நண்பர் அறிவழகன் யோசனையின் பேரில் அன்பழகன் அவரது மனைவி கலைச்செல்வி பெயரில் வங்கி கணக்கு துவங்கியுள்ளார்.
தன் கொளுந்தியாள் முத்துலட்சுமியை திருமணம் செய்து தருவதாக அறிவழகன் கூறியதை நம்பி வங்கி கணக்குகளில் சேமிக்க ஒரு கோடியே 27 லட்சம் ரூபாய் பணம் மற்றும் முத்துலட்சுமிக்கு 45 பௌன் நகைகளை பாலசுப்பிரமணியன் வழங்கியுள்ளார்.
ஆனால் திடீரென பெண் தர மறுத்ததோடு நகை பணத்தையும் திருப்பித் தராததால் மனமுடைந்த பாலசுப்ரமணி விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் அறிவழகன் குடும்பத்தினர் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை மனைவி குழந்தையுடன் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.






