முதல்வர் வேட்பாளரை அதிரடியாக அறிவித்த பாஜக! அரசியல் களத்தில் பரபரப்பு!!
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக ‘மெட்ரோ’ ஸ்ரீதரனை, அக்கட்சி அறிவித்துள்ளது.
டெல்லியில் முதன்முறையாக மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தியவர் ஸ்ரீதரன். கொல்கத்தா, கொச்சி உள்ளிட்ட மெட்ரோ ரயில் திட்டங்களின் நிர்வாகியாகவும், ஸ்ரீதரன் இருந்தார். ‘மெட்ரோமேன்’ என்ற அடைமொழியுடன் தான் ஸ்ரீதரன் அழைக்கப்பட்டு வருகிறார்.
தமிழகத்தை போலவே ஏப்ரல் 6ம் தேதி சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ளும் கேரளாவிலும், அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. அங்கு, விஜய் யாத்திரா என்ற பெயரில் யாத்திரையை பாஜக மேற்கொண்டு வருகிறது. மற்றும் பல்வேறு பிரபலங்களை தங்கள் பக்கம் இழுத்து வருகிறது. அவ்வகையில், அண்மையில் மெட்ரோ ஸ்ரீதரனும் பாரதிய ஜனதாவில் இணைந்தார்.
இந்தநிலையில், கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர் வேட்பாளர் மெட்ரோ ஸ்ரீதரன் பெயரை, அக்கட்சி அறிவித்துள்ளது. கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் கூறும்போது, ஸ்ரீதரனின் திறமையும், அவர் மீதான நம்பிக்கையும் வெல்ல முடியாத ஒன்று. மோடி அரசு மற்றும் வளர்ச்சி அரசியல் மீது நம்பிக்கை கொண்டது. எனவேதான், ஸ்ரீதரனை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது. நிச்சயம் அவரை மக்கள் பதவியில் அமர வைப்பாளர்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
திடீரென முதல்வர் வேட்பாளராக மெட்ரோ ஸ்ரீதரனை பாஜக அறிவித்திருப்பது, கேரள அரசியல் களத்தில் ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




