--- --:--:-- --

அமெரிக்காவில் விமானப் போக்குவரத்து முடக்கம் – ஆயிரக்கணக்கான விமானங்கள் பாதிப்பு

9

அமெரிக்காவில் விமானப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் தகவல் தொடர்பு அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடு முழுவதும் விமானங்கள் புறப்படுவதற்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது. நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தப் பாதிப்பு விமானப் பயணிகளைப் பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கியது.

 

 

அமெரிக்காவின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பான FAA இந்தத் தடையைப் பின்னர் நீக்கியது. இருப்பினும், விமான நிலையங்களில் பயணிகள் காத்திருப்பு, விமான ரத்து மற்றும் தாமதம் போன்ற பிரச்சினைகள் தொடர்ந்தன.

 

 

நவம்பர் 14-ஆம் தேதி வெளியான தகவலின்படி, 2,500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பழைய தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon