--- --:--:-- --

தகாத உறவால் நடந்த விபரீத கொலை மற்றும் தற்கொலை..!

7

ங்ககிரி அருகே வறுமையின் காரணமாக தாய் தனது இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சேலம் மாவட்டம் சங்ககிரி முழுதும் புதுவளவு பகுதியை சேர்ந்தவர்கள் பிரியங்கா, சரத்குமார் தம்பதியினர் இவர்களுக்கு கிருத்திக் என்ற ஆறு வயது மகனும் 3 மாத பெண் குழந்தையும் பிறந்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரியங்காவுக்கு பார்த்திபன் என்ற வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

 

கணவர் மனைவியின் தகாத உறவை கண்டித்துள்ளார். ஆனாலும் அவருடனான தொடர்பை பிரியங்கா விடவில்லை. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சரத்குமார, பிரியங்காவின் தந்தை தங்கவேல் அண்ணன் நந்தகுமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து பார்த்திபனை கொலை செய்துள்ளனர்.

 

இந்த வழக்கில் 3 பேரையும் கைது செய்த போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரியங்காவின் தந்தை தங்க வேலுவுக்கு மட்டும் நீதிமன்றம் ஜாமீன் கொடுத்தது.

 

இதனிடையே குழந்தைகளை கவனிக்க போதுமான பணம் இல்லாமல் பிரியங்கா வறுமையில் வாடியுள்ளார். அதோடு தனது இரண்டு குழந்தைகளையும் கவனிக்க முடியாத காரணத்தால் அவர்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு பிரியங்காவும் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது பிரியங்காவின் 6 வயது மகன் கிருத்திக் குமார் மட்டும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். சிறுவனை ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

சம்பவ இடத்திலேயே உயிரிழந்த 3 மாத பெண் குழந்தை மற்றும் பிரியங்காவின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

தகாத உறவால் வறுமைக்கு தள்ளப்பட்ட பெண் ஒருவர் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon