--- --:--:-- --

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்… காணொலி மூலம் நாளை நடக்கிறது

Stalin 06

திமுக மாவட்ட செயலாளர்களின் அவசரக் கூட்டம், காணொலி வாயிலாக நாளை நடைபெறும் என்று, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

 

தமிழக சட்டசபைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் திமுக மும்முரமாக ஈடுபட்டுள்ளது. அதை தொடர்ந்து திருச்சியில் வரும் 7ம் தேதி பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில், திமுக மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக, நாளை காலை 9 மணிக்கு, மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (மார்ச் 5, வெள்ளிக்கிழமை) காலை 9.00 மணி அளவில், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும். இதில், மாவட்டக் செயலாளர்கள்/ பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

 

இக்கூட்டத்தில், மார்ச் 7-ல் திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டம் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon