அனைத்து துறைகளுக்கும் வரி சலுகை அறிவிக்க வேண்டும்..!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து துறைகளுக்கும் வரி சலுகை அறிவிக்க வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொரொனாவால் அனைத்து தொழில்களும் வருமான இழப்பை சந்தித்துள்ளனர்.
அவர்களுக்கு வரிச் சலுகைகளையும் கால அவகாசத்தையும் கேரள அரசு வழங்கியுள்ளதாகவும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 10 மாதங்களாக திரையரங்கம் மின் கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடி செய்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் திரைத்துறையில் ஏற்பட்ட இழப்பால் அதனை சார்ந்த அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கேரள அரசை முன்னுதாரணமாக பின்பற்றி கட்டண சலுகை, கேளிக்கை வரி, சொத்து வரி ஆகியவற்றில் சலுகைகளை வழங்கிட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.






