--- --:--:-- --

தேமுதிக தலைவர் விஜயகாந்தை அதிமுகவை சேர்ந்த செல்வராஜ் அவதூறாக பேசியதாக கூறி மேட்டுப்பாளையத்தில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் !!!

தேமுதிக தலைவர் விஜயகாந்தை அதிமுகவை சேர்ந்த செல்வராஜ் அவதூறாக பேசியதாக கூறி மேட்டுப்பாளையத்தில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் !!!

தேமுதிக தலைவர் விஜயகாந்தை அதிமுகவின் செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.இதனை கண்டித்து தேமுதிக மாவட்ட துணைச்செயலாளர் மல்லி ( எ ) சுப்ரமணியம் தலைமையில் திரண்ட தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

ஆர்ப்பாட்டத்தில் கோவை செல்வராஜை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.இதில் தேமுதிக நகர செயலாளர் சோமசுந்தரம்,ஒன்றிய செயலாளர் நாகராஜ், காரமடை பேரூர் கழக செயலாளர் சிவராஜ், அவைத்தலைவர் பொன்னையன், தலைமை கழக பொதுச்செயலாளர் மணியன்,நகர பொருளாளர் கணேசன், கோவை மாவட்ட மகளிர் அணி செயலாளர் நாகமாணிக்கம், காரமடை ஒன்றிய மகளிர் அணி செயலாளர் மாலதி, கோவை மாவட்ட தொழிற்சங்க இணைச் செயலாளர் முருகவேல், மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் ஜாகிர் உசேன்,தொழிற்சங்க செயலாளர் மணல் முருகன்,இளைஞரணி நிர்வாகிகள்,நகர கழக துணைச் செயலாளர்கள், ஒன்றிய,பேரூர் கழக நிர்வாகிகள், செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon