--- --:--:-- --

உச்சிப்புளி ஊராட்சி தனி நபர்களின் ஆக்கிரமிப்பு பிடியில் ! ஆக்கிரமிப்புக்கு ஊராட்சி நிர்வாகமும் நெடுஞ்சாலை துறையினரும் உடந்தை என குற்றச்சாட்டு !! மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை !!!

1.1

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி எம்மனங்கொண்டான் ஊராட்சி இதன் நிர்வாகம் உச்சிப்புளி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வருகிறது.

 

மேலும் மதுரை முதல் இராமேஸ்வரம் இணைக்கும் ஊராக விளங்குகிறது உச்சிப்புளி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இங்கு காவல் நிலையம்.அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம், பள்ளி வாசல். கடற்படை வான்களமான பருந்து கடற்படை வானூர்தி தளம் இங்கு அமைந்துள்ளது.

 

இராமநாதபுரம் நகருக்கான குடிநீர் தேவை இங்கிருந்தே பெரும்பாலும் பெறப்படுகின்றது. உச்சிப்புளி கொச்சியையும் இராமேசுவரத்தையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆகும் 140 கிமீ தொலைவில் உள்ள மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம் அண்மையில் உள்ள வானூர்தி நிலையமாகும்.

இங்கு சாலையின் இருபுறமும் தகர சீட்டு போட்டும்,தெண்ணை கிடுகினால் ஆன கொட்டகை அமைத்து ஆக்கிரமிப்பு செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மேலும் இந்த ஊர் ஏற்கனவே எந்நேரமும் மக்கள் அதிகளவில் கூடும் பகுதியாக இருந்து வருகிறது இந்நிலையில் ஆக்கிரமிப்பாளர்கள் மூலம் இப்பகுதி நெருக்கடி நிறைந்து காணப்படுகின்றன.

 

இந்த ஆக்கிரமிப்பாளர்களிடம் ஊராட்சி நிர்வாகமும் மற்றும் நெடுஞ்சாலை துறையினரும் ரசீது இன்றி வசூல் செய்து வருவதாக சமூக ஆர்வலர்கள் மத்தியில் பேசப்படுகிறது.இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இதே நிலை நீடித்தால் இப்பகுதி மக்களை ஒன்றிணைத்து மிகப்பெரிய அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்திட கூடும் என்று சமூக ஆர்வலர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon