தெலுங்கு பட நடிகர் சிரஞ்சீவிக்கு கொரொனா தொற்று உறுதி..!
தெலுங்கு பட திரைப்பட நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 65 வயதாகும் சிரஞ்சீவி ஆச்சாரியா எனும் புதிய படத்தில் நடிக்கிறார். கொரொனா பரவலால் படப்பிடிப்பு மார்ச் மாதத்திலிருந்து தடைப்பட்டிருந்தது.
அந்த படப்பிடிப்பிற்கு மீண்டும் செல்லும் முன்பு சிரஞ்சீவி கொரொனா பரிசோதனை எடுத்துள்ளார். இதில் கொரொனா உறுதியாகி இருப்பதாக ட்விட்டரில் வெளியிட்ட பதிவு மூலம் சிரஞ்சீவி வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் அறிகுறிகள் எதுவும் இல்லாததால் வீட்டிலேயே தன்னைத் தானே சுய தனிமைபடுத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள சிரஞ்சீவி கடந்த 5 நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதனை எடுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.






