கோவை : பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் சிக்கிய ” பலே ” திருடர்கள் இருவர்.ரூ.40 லட்சம் மதிப்பிலான இரு சக்கர,நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் !!!
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொள்ளையடிக்கப்பட்ட வாகனங்களை கண்டுபிடிக்கும் பொருட்டு எஸ்.பி அருளரசு அறிவுறுத்தலின் பேரில் டி.எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் பிரித்திவிராஜ்,சப் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம்,சிறப்பு உதவி ஆய்வாளர் சசிக்குமார்,தலைமைக்காவலர் மகேந்திரன்,சைபர் செல் வேலுச்சாமி,மகேஷ் குமார்,காவலர்கள் ராஜேஸ், முத்தமிழரசன், சதீஸ்குமார் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது,அவ்வழியே வந்த சொகுசு காரை நிறுத்த முயல நிறுத்தாமல் சென்றுள்ளனர்.
போலீசாரும் சொகுசு காரை சினிமா பாணியில் விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்தனர்.பின்னர்,காரில் வந்த இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய தீவிர விசாரணை மேற்கொண்டதில் தஞ்சையை சேர்ந்த உதயநிதி என்பதும்,ஸ்ரீவில்லிப்புத்தூரை சேர்ந்த தன்ராஜ் என்பதும்,இவர்கள் இருவரும் இடிகரைப்பகுதியில் வசித்து வருவதும் தெரிய வந்தது.

மேலும்,காவல் துறையினர் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பெரியநாயக்கன்பாளையம், அன்னூர்,கோவில் பாளையம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் இரு சக்கர,நான்கு சக்கர வாகனங்களை கொள்ளையடித்திருப்பதும் தெரிய வந்தது.
பின்னர்,அவர்கள் இருவரையும் கைது செய்த காவல் துறையினர்அவர்களிடமிருந்து ரூ.40 லட்சம் மதிப்பிலான 3 சொகுசு கார்கள்,வேன்,இரு சக்கர வாகனங்கள் நான்கினையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட உதயநிதி மீது தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் திருட்டு வழக்குகள் உள்ளதாகவும், தன்ராஜ் மீது கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம்,விருதுநகர் சூளக்கரை காவல் நிலையங்களில் கள்ள நோட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் காவல் துறையினரின் தீவிர விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வாகன சோதனையில் சினிமா பாணியில் நிற்காமல் சென்ற சொகுசு காரை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்து வாகன கொள்ளையர்களை கைது செய்த காவல் துறையினரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.






