திருச்சியில் ஆடு திருடியதை தட்டி கேட்டவர் அரிவாளால் வெட்டி படுகொலை..!
திருச்சியில் ஆடு திருடியதை தட்டி கேட்ட ஆட்டோ ஓட்டுனரை பட்டப்பகலில் கழுத்தை அறுத்து கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த 24 ஆம் தேதி ஆடு திருட வந்த பரமேஸ்வரி மற்றும் அவரது மகன் மணிகண்டன் உட்பட அவரது குடும்பத்தினரை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
அப்போது அந்த கும்பல் முருகன் குடும்பத்தினரை தாக்கி விட்டு தப்பியது. காயமடைந்த முருகனும், அவரது மனைவியும் மருத்துவமனையில் இரண்டு நாட்கள் தங்கி சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய போது பின்தொடர்ந்து வந்த 15 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக தாக்கி கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளது.
தடுக்க முயன்ற முருகன் மனைவி புஷ்பவல்லிக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.






