--- --:--:-- --

பெண்கள் சிறுமிகளிடத்தில் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு வந்த பஞ்சாயத்து உறுப்பினர்..!

12

கொடைக்கானல் அருகே பழங்குடி கிராமத்தில் மைனர் போல திரிந்து பெண்கள் சிறுமிகளிடத்தில் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுவந்த பஞ்சாயத்து உறுப்பினரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

 

கொடைக்கானல் அருகே உள்ள கிராமத்தில் கடந்த 8 மாதத்திற்கு முன்பு சொக்கர் பாலாஜி என்பவன் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றான். திருமணமாகாத இவன் பஞ்சாயத்து உறுப்பினர் ஆனதும் அந்த மதப்பில் கிராம பெண்களிடத்தில் மைனர் போல நடந்து கொள்வானாம்.

 

பெண்களிடத்தில் சிறுமிகளிடத்தில் தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் 14 வயது சிறுமி ஒருவருக்கு சொக்கர் பாலாஜிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து சிறுமியின் உறவினர்கள் கொடைக்கானல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 

இதுதொடர்பாக போலீசார் விசாரிக்க வந்த நிலையில் தனக்கு கொரொனா வந்துவிட்டதாக கூறி சொக்கன் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் இருந்து தப்பியவர் ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் தலைமறைவாக இருந்து வந்தார்.

 

இந்த நிலையில் நேற்று பாலாஜி ஈரோட்டில் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. புகார் அளிக்கப்பட்டு 50 நாட்களுக்கு பிறகு ஈரோடு போலீசார் உதவியுடன் அவனை கைது செய்து கொடைக்கானல் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

 

குற்றச்சாட்டை அடுத்து தற்காலிகமாக பஞ்சாயத்து உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அரசு தரப்பில் முறையான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவனின் பஞ்சாயத்து உறுப்பினர் பதவியை நிரந்தரமாக பறிக்கப்படும் என்று கொடைக்கானல் சார் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon