டிரம்ப்புக்கும்,ஜோபைடனுக்கும் இடையே நடந்த காரசார விவாதம்…!
அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான முதலாவது நேரடி விவாதத்தில் ட்ரம்ப் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் காரசாரமாக மோதிக்கொண்டனர். ஓகுயுவில் நடந்த விவாதத்தின்போது டிரம்ப் தீவிர இடதுசாரி என்று விமர்சித்தார்.
மகன்களில் ஒருவர் ஊழல் செய்துள்ளார் என்று கூறினார் டிரம்ப். அதற்கு பதிலளித்த ஜோபைடன் டிரம்ப் பொய், இனவெறி பிடித்தவர், கோமாளி என்று வர்ணித்தார். உச்சகட்டமாக ரஷ்ய அதிபர் புதினின் கை பொம்மை என்று கூறினார். அதற்கு பதில் அளிக்காத டிரம்ப் ஜோபைடனின் மகன் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி ஆரம்பித்தார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற ஜோ பைடன் டிரம்பை நோக்கி வாயை மூடுமாறு கத்தினார்.
இரண்டு வேட்பாளர்களும் கோபத்தில் மாறி மாறி திட்டி கொண்டதால் நவம்பர் 3ஆம் தேதி நடக்க உள்ள அதிபர் தேர்தலில் பெரும் குழப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.






