--- --:--:-- --

தமிழகத்தில் இன்று 5,870 பேருக்கு கொரோனா பாதிப்பு…. 61 பேர் உயிரிழப்பு…

sgg

மிழகத்தில் கொரோனா நிலவரம்  குறித்து சுகாதாரத்துறை  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:   

 

 தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,57,697 ஆக அதிகரித்துள்ளது.

 

தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 51 ஆயிரத்து 583 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 859 பேர் குணம் அடைந்துள்ளனர்.

 

கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 98 ஆயிரத்து 366 ஆக உயர்ந்துள்ளது.

 

கொரோனா பாதிப்பால் இன்று 61 பேர்  உயிரிழந்த நிலையில் கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்து 748 ஆக அதிகரித்துள்ளது.உயிரிழப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து குறைந்து வருவதும் குறிப்பிபத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon