--- --:--:-- --

புதிய கல்விக் கொள்கை குறித்து ஆலோசனை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது..!

11

புதிய கல்விக் கொள்கை குறித்து ஆலோசனை நடத்த மாநில ஆளுநர்கள் மாநாட்டுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார். புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருக்கும் நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

இந்த ஆலோசனையின் போது ஆளுநரின் கருத்துக்கள் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தரின் கருத்துக்கள் ஆகியவற்றை கேட்டறிந்து அதற்கு தக்கபடி மாற்றங்கள் கொண்டுவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

காணொளி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அரசு பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் பங்கேற்கின்றனர்.

Leave a Reply

Right Menu Icon