பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் மீது குற்றம் சாட்டும் ராகுல் காந்தி..!
இந்திய ஜனநாயகம் மற்றும் சமூக நல்லிணக்கத்தின் மீது பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் ஊடகங்கள் தாக்குதல் நடத்தி இருப்பதை சர்வதேச ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டி விட்டதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸுக்கு சாதகமான அம்சங்களை ஃபேஸ்புக் வெளியிடுவதாக பாரதிய ஜனதாவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு பாரதிய ஜனதாவிற்கு சாதகமான அம்சங்களும் வெறுப்புணர்வை தூண்டக்கூடிய பதிவுகளையும் ஃபேஸ்புக் விட்டு வருவதால் வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கையின் கட்டுரையை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் இந்திய ஜனநாயகம் மற்றும் சமூக நல்லிணக்கத்தின் மீது ஃபேஸ்புக் மற்றும் அதன் மற்றொரு பிரிவான வாட்ஸ்அப் தாக்குதல் நடத்தியிருப்பதாக ராகுல் குற்றம் சாட்டியிருந்தார். ஃபேஸ்புக்கின் இந்த நடவடிக்கையை சர்வதேச ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டி விட்டன என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்றும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.






