டி.கே.சிவக்குமார் அப்படித்தான் பேசுவார், எனக்கு தமிழ்நாடு நலன்தான் முக்கியம்: மாணிக்கம் தாகூர்
கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் அம்மாநிலத்தின் நலனுக்காகத்தான் பேசுவாரே தவிர, அவருக்குத் தமிழ்நாட்டின் நலன் முக்கியமல்ல என்றும், ஆனால் தமிழ்நாட்டிற்கு எப்படியாவது காவிரி தண்ணீர் வந்து சேர வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும் எம்.பி-யுமான மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், கர்நாடக தலைவர்கள் தங்கள் மாநில உரிமைகளுக்காக குரல் கொடுப்பது இயல்பு என்றாலும், தமிழ்நாட்டின் உரிமையையும், விவசாயிகளின் தேவையையும் பாதுகாத்துத் தண்ணீரைப் பெற்றுத் தருவதே நமக்கு முதன்மையானது எனக் கூறி, “எனக்கு தமிழ்நாடு நலன்தான் முக்கியம். தமிழ்நாட்டிற்கு எப்படியாவது தண்ணீர் வர வேண்டும்” என்பதைத் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.



