--- --:--:-- --

எல்லையில் சீனா ஊடுருவ முயற்சிப்பதாக இந்தியா குற்றச்சாட்டு..!

3.1

பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போது கிழக்கு லடாக் பகுதியில் சீன ஊடுருவ முயன்றதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. கடந்த மே மாதம் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன படையினர் ஊடுருவ முயன்றதால் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

 

இதனையடுத்து தமது படைகளை திரும்பப் பெறுவதாக சீன ராணுவம் ஒப்புக் கொண்டது. இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி நள்ளிரவில் சீன ராணுவத்தினர் மீண்டும் இந்திய எல்லையை நோக்கி முன்னேறினார்.

 

அதனை இந்திய ராணுவத்தினர் முறியடித்த நிலையில் 31ஆம் தேதி கிழக்கு லடாக் பகுதியில் மீண்டும் சீன படையினர் ஊடுருவ முயற்சித்ததாக ராணுவ செய்தி தொடர்பாளர் கூறியிருக்கிறார். இந்திய ராணுவம் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வந்த நிலையில் பீரங்கிகளுடன் சம்பவ இடத்திற்கு முன்னேறினார்.

 

இதனால் சீனாவின் ஊடுருவல் முயற்சி தடுக்கப்பட்டது. எல்லையில் நிலவும் பதற்றம் தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் சீன ராணுவம் ஊடுருவ முயற்சி செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

இதன் இடையே எல்லைப் பிரச்சனை குறித்து பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் ஆகியோர் உடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.

Leave a Reply

Right Menu Icon