--- --:--:-- --

கோவையில் அதிகரித்து வரும் கொரோனா.இன்று முதல் வரும் 7ம் தேதி வரை தங்க நகைக்கடைகள் இயங்காது என்று தங்க நகை விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு !!!

18

மிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீடிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

 

அதன்படி இன்று முதல் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. நேற்று உச்சபட்ச அளவாக 589 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு தங்க நகை விற்பனையாளர்கள் சங்கம் ஒரு முடிவை எடுத்துள்ளனர். அதன்படி இன்று முதல் வரும் 7ம் தேதி வரை கடைகளை திறக்காமல் சுகாதாரத் துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு உதவ அவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon