--- --:--:-- --

கோவையில் தொடர்ந்து 2 வது நாளாக 500 ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு.தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் மக்கள் அதிர்ச்சி !!!

15

கோவை மாவட்டத்தில் இதுவரை 16075 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதுவரை 11861 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.310 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இந்த நிலையில் கோவையில் கடந்த 30 ஆம் தேதியன்று உச்சப்பட்ட அளவான 498 என்ற அளவில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.அதனை தொடர்ந்து 2 ஆம் நாளான நேற்றும் 589 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.3 ஆம் நாளான இன்று 581 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பால் கோவை மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon