வாலிபர் தாக்கியதில் மூதாட்டிக்கு பலத்த காயம்:திருப்பாலைக்குடி போலீஸ் விசாரணை
இராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் அருகிலுள்ள சோழந்தூர் பகுதியில் வசிக்கும் மலையாண்டி மனைவி பந்தானம் (85) என்ற மூதாட்டியை அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் தம்பிராஜ் என்ற வாலிபர் மூதாட்டி மீது திடீரென தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மூதாட்டியின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துள்ளார் உடனடியாக மூதாட்டியை மீட்டு அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றதாகவும் அவரை சோதித்த மருத்துவர் மேல்சிகிச்சைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் பரிசோதனையில் இடது கையில் பலத்த அடி ஏற்பட்டு அதற்கு மாவுகட்டு போட்டும் தலையில் தையல் போட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து திருப்பாலைக்குடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
https://play.google.com/store/apps/details?id=kuttram.kuttrame






