கோவையில் 22 பேர்கள் மட்டுமே கலந்து கொண்ட சீர்திருத்த திருமணம் !!!
கோவை வேலாண்டிபாளையத்தை அடுத்துள்ள இடையர்பாளையம் பாரதியார் வீதியில் வசித்து வரும் தம்பதிகள் ராஜேந்திரன்-சரஸ்வதி.இவர்களது மகன் பிரபு. சென்னையை சேர்ந்த பன்னீர்செல்வம் – கலையரசி தம்பதியினரின் மகள் எழிலரசி.பிரபு மற்றும் எழிலரசிக்கு இன்று காலை 11 மணிக்கு சீர்திருத்த திருமணம் நடைபெற்றது.
இந்த திருமண நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக மாநில பேச்சாளர் குமாரராஜா தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.திராவிடர் கழகத்தின் மாநில பொதுக்குழு உறுப்பினர் அன்பரசு முன்னிலை வகித்தார். திராவிடர் கழத்தின் மண்டல செயலாளர் சிற்றரசு, மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மற்றும் நிர்வாகிகள் தமிழ்முரசு, பிரபாகரன், மணிவண்ணன், கம்யூனிஸ்ட் கட்சி ஏ.பி.மணிபாரதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மணமக்கள் இருவரும் இணைந்து வாழ்க்கை நடத்துவதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் மணமகனுக்கு மணமகள் எழிலரசியும், மணமகளுக்கு மணமகன் பிரபுவும் மாலை அணிவித்தனர். உடனே திருமணம் நிறைவுற்றதாக அறிவிக்கப் பட்டது. இந்த திருமண விழாவில் இரு வீட்டார் மற்றும் கட்சி நிர்வாகிகள் என 22 பேர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.






