--- --:--:-- --

சிவகங்கை மாவட்டத்தை கொரானா இல்லாத மாவட்டமாக மாற்றிய செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர் பாஸ்கரன் நன்றி தெரிவித்தார்

1

கொரானா வைரஸ் உலகம் முழுவதும் பல உயிர் இழப்புகளை ஏற்படுத்தி அச்சுறுத்தி வரும் வேலையில் சிவகங்கை மாவட்டத்தில் கொரானா நோய் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்ட பன்னிரண்டு பெயர்களையும் சிறப்பாக சேவையாற்றி நோயில் இருந்து பூரணமாக குணமடைந்து விடுபட காரணமாயிருந்த சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தமிழக கதர் மற்றும் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர் பாஸ்கரன் வணங்கி, நன்றி தெரிவித்தார்.

மேலும் அவர்களது சேவையைப் போற்றும் விதமாக அவர்களுக்கு அரிசி மற்றும் பலசரக்கு பொருட்களை வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் டீன் ரத்தினவேல் மருத்துவர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon