சித்த மருத்துவத்தால் கொரோனாவை குணப்படுத்த ஆய்வு!
சித்த மருத்துவத்தால் கொரொனாவை குணப்படுத்த முடியுமா என மேற்கொண்ட ஆய்வுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பவரும் ஆயுஸ் மருத்துவர்கள் சங்க தலைவர் செந்தமிழ் செல்வன் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வசந்தகுமார் சித்த மருத்துவத்தில் கொரொனா நோயைக் குணப்படுத்த கண்டறிந்துள்ள மருந்து குறித்த பட்டியலிட்டார்.
சித்த மருத்துவத்தில் வீரம், லிங்கம், பாதம், செந்தூரம், அரிதாரம் உள்ளிட்ட பல வகை மூலிகைகளில் ஒன்றாக கலந்து மருந்தாக உட்கொண்டாலே உள்ளிட்ட எல்லா வகையான வைரஸ்கள் அழிக்கப்பட்டு விடும் என்ற வழக்கறிஞர் வாதிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பின்னர் விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.






