--- --:--:-- --

கோவையின் காவல் தெய்வம் கோனியம்மன் கோவில் தேரோட்டம்! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

2

கோவை டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள கோனியம்மன் கோவில் கோவையின் காவல் தெய்வமாக போற்றப்படுகிறது. பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவிலின் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் நிலை திடலில் துவங்கி ராஜவீதி, ஒப்பணகார வீதி,ஐந்து முக்கு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

 

கடந்த 13ம் தேதி பூச்சாட்டுடன் விழா தொடங்கிய தேர்த்திருவிழா கொடியேற்றம், திருவிளக்கு வழிபாடு,திருக்கல்யாணத்திற்கு பிறகு இன்று தேரோட்டம் நடைபெற்றது.தேரோட்டத்தை அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். தேர்த்திருவிழாவினை முன்னிட்டு கோவை ராஜவீதி,பெரிய கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டிருந்தனர்.

விழாவின் முக்கிய அம்சமாக மத நல்லிணக்கத்தை பறை சாற்றும் விதமாக இஸ்லாமியர்கள் பக்தர்களின் தாகத்தை தணிக்கும் வகையில் குடிநீர் வழங்கி மகிழ்ந்தனர்.

 

தேர்த்திருவிழாவினை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் கைலாஷ் தலைமையிலான குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon