இறந்த தன் அம்மா மடியில் தூங்கப்போவதாக கூறிவிட்டு சிறுவன் தற்கொலை!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே இறந்த தாயின் மடியில் தூங்க போவதாக கூறி தந்தை மற்றும் தம்பியுடன் தற்கொலை செய்துகொண்ட சிறுவனின் உருக்கமான வீடியோ வெளியாகியுள்ளது.

 

அரியூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் என்பவரின் மனைவி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக உயிரிழந்த நிலையில் கணவரை பிரிந்து வாழும் தனது அக்காள் மகள் லட்சுமி என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.

 

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவர்களிடையே தகராறு ஏற்பட்டதில் லக்ஷ்மி வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுந்தர் மகன்களுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வாழைப்பழத்தில் குருணை மருந்து வைத்து உண்டு உயிரிழந்துள்ளார்.

 

இதற்கு முன்னதாக அவர்கள் செல்போனில் பதிவு செய்துள்ள வீடியோவில் சுந்தரின் மூத்த மகன் சுனில் தான் அம்மா மடியில் தூங்க போவதாகவும், இனி லட்சுமியிடம் விளக்குமாறு அடி வாங்க மாட்டேன் எனவும் பேசியிருப்பது கேட்போரை உலுக்கி எடுப்பதாக உள்ளது.


Leave a Reply