--- --:--:-- --

2 மாதத்தில் நகர்ப்புற உள்ளாட்சிக்கு தேர்தல்..? முதல்வர் எடப்பாடி சூசக தகவல்!!

e

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிக்கும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஏப்ரல் இறுதிக்குள் தேர்தல் நடைபெறும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக நிர்வாகிகளிடம் சூசகமாக தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் 3 ஆண்டுகள் இழுபறிக்குப் பின், கடந்தாண்டு டிசம்பர் இறுதியில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. புதிதாக உருவாக்கம் செய்யப்பட்ட மாவட்டங்களில் வார்டு வரையறை உள்ளிட்ட பிரச்னைகளால் 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

 

இதேபோல் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர் பதவிகள் மறைமுக தேர்தல் மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டதால் பிரச்னைகள் எழுந்தது. இதனால் ஒட்டுமொத்தமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளிலும் தேர்தல் நடத்தப்படவில்லை.

எனவே, விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி இடங்களுக்கும், நகர்ப்புறங்களிலும் தேர்தல் எப்போது? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று தொடங்கி வரும் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது.

 

“இன்று தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்ட அதிமுக நிர்வாகிகள் இடையே பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வரும் ஏப்ரல் இறுதிக்குள் விடுபட்ட பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் எனவும், அதற்கு அதிமுகவினர் தயாராக இருக்குமாறு சூசகமாக தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது”

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon