2 மாதத்தில் நகர்ப்புற உள்ளாட்சிக்கு தேர்தல்..? முதல்வர் எடப்பாடி சூசக தகவல்!!
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிக்கும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஏப்ரல் இறுதிக்குள் தேர்தல் நடைபெறும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக நிர்வாகிகளிடம் சூசகமாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 3 ஆண்டுகள் இழுபறிக்குப் பின், கடந்தாண்டு டிசம்பர் இறுதியில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. புதிதாக உருவாக்கம் செய்யப்பட்ட மாவட்டங்களில் வார்டு வரையறை உள்ளிட்ட பிரச்னைகளால் 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
இதேபோல் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர் பதவிகள் மறைமுக தேர்தல் மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டதால் பிரச்னைகள் எழுந்தது. இதனால் ஒட்டுமொத்தமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளிலும் தேர்தல் நடத்தப்படவில்லை.

எனவே, விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி இடங்களுக்கும், நகர்ப்புறங்களிலும் தேர்தல் எப்போது? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று தொடங்கி வரும் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது.





