பிரதமர் மோடியின் ஆதரவுக் கடிதத்துக்கு சீன அரசு நன்றி
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்கு உதவ தயார் என கடிதம் எழுதியிருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சீன அரசு நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கிங்ஸ் கொரோனா பாதிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த இந்தியாவிற்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
மேலும் இதன் மூலம் இந்தியா சீனா இடையேயான நட்புறவு நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் சீன அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன அதிபருக்கு கடிதம் எழுதிய பிரதமர் மோடி கொரோனா வைரஸால் பலியானோருக்கு இரங்கல் தெரிவித்ததோடு உகானிலிருந்த இந்தியர்களை மீட்க உதவியதற்கு நன்றி தெரிவித்திருந்தார்.
மேலும் கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள சவாலான சூழலை எதிர்கொள்ள இந்தியா உதவ தயார் எனவும் பிரதமர் மோடி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




