--- --:--:-- --

குருப் 4 தேர்வு முறைகேடு எதிரொலி..! வெளிமாவட்ட மையங்களில் தேர்வு எழுத டிஎன்பிஎஸ்சி புதிய கட்டுப்பாடு!!

41b53b8b-8cef-416f-9b33-bb8ca4dd6b24

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க, வேறு மாவட்டத்தில் உள்ள மையத்தை தேர்வு செய்பவர்கள் உரிய காரணத்தை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என டிஎன்பிஎஸ்சி புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

 

சமீபத்தில் வெளியான டிஎன்பிஎஸ்சி குருப் 4 தேர்வு முடிவுகளில் பெரும் சர்ச்சை வெடித்தது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் தங்கச்சிமடம் தேர்வு மையங்களில் தேர்வெழுதியவர்களில் பலர் மாநில அளவில் ரேங்க் பெற்றதால் சந்தேகம் எழுந்தது. அதிலும் அவர்கள் அனைவரும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் சந்தேகம் மேலும் வலுத்தது.

 

இதைத் தொடர்ந்து, தேர்வில் முறைகேடு நடந்ததா? என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தினர். முதல் 100 இடங்களில் இந்த மையங்களில் தேர்வு எழுதிய 40 பேர் இடம் பிடித்திருந்ததால் அவர்களை சென்னைக்கு வரவழைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

விசாரணை முடிவில், தேர்வில் முறைகேடு நடந்திருப்பது உண்மைதான் என்பது தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்தமாக குரூப் 4 தேர்வு முடிவை ரத்து செய்வதா? அல்லது முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் மையங்களில் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களை மட்டும் தண்டிப்பதா? என அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

 

இதற்கிடையே, இனிமேல் வெளி மாவட்டங்களில் தேர்வு மையத்தை தேர்வு செய்பவர்கள், அதற்குரிய காரணத்தை தெளிவாக குறிப்பிட வேண்டும் என டிஎன்பிஎஸ்சி சார்பில் புதிய கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது குரூப் 1 தேர்வுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அந்த விண்ணப்பத்தில், வேறு மாவட்ட தேர்வு மையத்தை தேர்வு செய்தால், அதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon