--- --:--:-- --

நித்யானந்தா மீது கனடாவில் புகார் – சிஷ்யை வில்லியாக மாறியது எப்படி?

8

தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வரும் நித்தியானந்தா மீது மேலும் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது .இந்த முறை கனடாவில் அவர் மீது பகீர் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சிஷ்யை வில்லியாக மாறியது ஏன்?

 

சிங்கம் படத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் நாயகன் சூர்யாவை போல நித்யானந்தா மீது நாடு கடந்து கண்டம் விட்டு கண்டம் தாண்டி மோசடி புகார்கள் வரத் தொடங்கியுள்ளது. கனடா நாட்டை சேர்ந்த 55 வயதான சிஷ்யர் ஒருவர் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு புதிய மோசடி புகார் கொடுத்துள்ளார். நடந்தது என்ன?

 

கனடா நாட்டில் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியை சேர்ந்தவர் 55 வயதான நித்திய கீதப்பிரியா. இணையம் மூலம் நிதியை பற்றி அறிந்துள்ளார். 2005 ஆம் ஆண்டிலிருந்து நித்தியின் சிஷ்யையாக பணியாற்றிவருகிறார். நித்யானந்தா ஆசிரமத்தில் நடத்தப்படும் பல்வேறு இணையதள கட்டண பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று உள்ளார்.

 

அண்மையில் நித்திய கீதப்பிரியா கனடா அரசாங்கத்தில் நித்யானந்தா மீது புகார் ஒன்றை கொடுத்துள்ளார். 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 லட்சம் ரூபாய் வரை பணம் கட்டி ஆன்லைன் மூலமாக பயிற்சியை முடித்த போது மேலும் பணம் கட்டுமாறு சொல்லப்பட்டுள்ளது. நித்யானந்தா பீடம் புதிய திட்டம் ஒன்றை துவங்கி உள்ளதாகவும், அதில் பணம் இரட்டிப்பாக்கி தரப்படும் என்றும் நிர்வாகிகள் வாக்குறுதி கொடுத்துள்ளனர்.

 

இதனை நம்பிய நித்திய கீதப்பிரியா 14 லட்சம் ரூபாய் வரை செலுத்தியுள்ளார். ஆனால் நித்யானந்தா மட நிர்வாகிகள் சொன்னபடி மீண்டும் வங்கிக் கணக்கிற்கு பணம் வரவே இல்லை. ஆசிரமத்தை தொடர்பு கொண்டு கேட்டதற்கும் தெளிவான விளக்கமும் கொடுக்கவில்லை என்று நித்திய கீதப்பிரியா தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

 

நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் இருந்து தொடர்ந்து பல பூஜைகளில் பங்கேற்க பணம் கட்ட சொல்லி வந்துள்ளன. ஆசிரமத்தில் படிக்கும் 13 வயது 14 வயது சிறுவர் சிறுமிகளை வைத்து போலியான பிரச்சாரம் செய்து இதுபோன்ற நித்தியானந்தா மோசடியில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் சிறுவர்களை, குழந்தை தொழிலாளர்களாக பயன்படுத்துவதாகவும் ஆன்மீகம் என்ற பெயரில் மார்க்கெட்டிங் நடப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 

இதுவரை தான் நித்யானந்தா ஆசிரம நிர்வாகத்திடம் 90 லட்சம் ரூபாய்க்கு மேல் இழந்துள்ளதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். தனது சேமிப்பு கணக்கில் இருந்து பணத்தை இழந்து விட்டதால் தன்னால் இந்தியா வர முடியாத நிலை உள்ளதால் மோசடிப் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நித்தியானந்தா கனடா நாட்டு இந்திய தூதரகத்திலும், கனடா பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலும் புகார் தெரிவித்துள்ளார்.

 

இதனிடையே கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் நித்தியானந்தாவின் பாஸ்போர்ட் தொடர்பான வழக்கில் நித்தியானந்தா இரண்டு பாஸ்போர்ட்டை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon