நிர்பயா வழக்கு: தூக்குத் தண்டனையிலிருந்து நிவாரணம்கோரி மனுக்கள்
நிர்பயா பாலியல் பலாத்கார கொலை வழக்கில் தூக்கு தண்டனையில் இருந்து நிவாரணம் கோரி குற்றவாளிகள் 2 பேர் தாக்கல் செய்த மனுக்கள் 14ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் 2012ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பல் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து தூக்கி வீசியது. இதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் அக்ஷய்குமார் சிங் , வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய 4 பேரையும் 22ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் வினய் குமார் சர்மா, முகேஷ் ஆகியோர் தூக்கில் இருந்து தப்பிக்கும் கடைசி முயற்சியாக மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்கள் வருகிற 14ம் தேதி 5 நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வரும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.





