தோற்றதற்கான காரணம் தி.மு.க-விற்கு இன்னும் புரியவில்லையா? ஆதவ் அர்ஜுனா
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “ கூட்டணி என்பது அந்தந்த தலைமையும் கட்சியும் முடிவு செய்ய வேண்டிய இடத்தில் அவர்களுக்கான ஜனநாயக கடமை இருக்கிறது. எந்த கட்சியும் தி.மு.க-விற்கு அடிமை சாசனம் எழுதிய கட்சி கிடையாது. தான் ஏன் தோற்றோம் என்பதை ஆராய்வதற்கு தி.மு.க குழு அமைத்துள்ளது. இன்னும் அவர்களுக்கு புரியவில்லை ஏன் தோற்றோம் என்று.
அரசியலில் ஒரு கட்சியையும் ஒரு தலைவரையும் தாக்கும் பொழுது பெண்னுடைய உறவை அடிப்படையாக வைத்து எப்பொழுது பெண்ணை நோக்கிய விமர்சனத்தை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். அப்படி ஆர்.ராசா சொல்ல முடியாத அளவிற்கு திருமாவை பார்த்து பதிவை வெளியிட்டுள்ளார். இது கண்டிக்கத்தக்கது” என்றார்.





