--- --:--:-- --

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது..!

6

சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு வருகை தந்த பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் இ.பி.எ.ஸ்தான் கட்சியின் பொதுச்செயலாளர் என்ற தீர்மான கடிதத்துடன் வருகை புரிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

கூட்டத்தில், எஸ்.பி. வேலுமணி தரப்பினர் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவும், அவர்களின் எம்.எல்.ஏ.க்கள் பதவி தொடர்பாகவும் தீா்மானம் நிறைவேற்றி சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ள சூழலில் அதிமுக அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon