தி.மு.க. ஓட்டு கலையவில்லை, விஜய் வாங்கியது அனைத்தும் அ.தி.மு.க. ஓட்டு – ராஜேந்திர பாலாஜி
இன்ஸ்டாகிராம் மூலம் மக்களின் மனநிலையை மாற்றி ஓட்டுகளை பெற முடியும் என்பது வெளிநாடுகளில் கேள்விப்பட்டு இருக்கிறோம். தற்போது அது தமிழகத்திலும் நடைபெற்று உள்ளது என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், விஜய் வாங்கியது அனைத்தும் அ.தி.மு.க.வின் ஓட்டுகள் தான். திமுகவின் ஓட்டு அப்படியே திமுகவிற்கே சென்றது. 2026 தேர்தல் முடிவுகளை யாரும் எதிர்பார்க்கவில்லை. தமிழ்நாட்டில் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி வெற்றிவாய்ப்பை இழந்தவர்களில் நானும் ஒருவன் என்றும் கூறியுள்ளார்.





