--- --:--:-- --

அமைச்சர் சாமிநாதன் தீவிர வாக்கு சேகரிப்பு! குண்டடம் பகுதியில் மக்கள் உற்சாக வரவேற்பு…

saminathan

மக்கள் புடைசூழ அளித்த வரவேற்புக்கு மத்தியில், அமைச்சர் சாமிநாதன் வாக்கு சேகரித்தார்.

திருப்பூர்: காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக வேட்பாளரும் அமைச்சருமான சாமிநாதன் தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, குண்டடம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கிராக்காடு பகுதியில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கிய அமைச்சர், அங்கிருந்து சுள்ளபெருக்கிபாளையம், நிழலி, எல்லப்பாளையம்புதூர் ஆகிய ஊர்களுக்குச் சென்று பொதுமக்களைச் சந்தித்தார். வழிநெடுகிலும் அவருக்கு திமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 

சாமிநாதன்
வாக்கு சேகரிப்பின்போது மக்களின் குறைகளை கனிவாக கேட்ட அமைச்சர் சாமிநாதன்

தொடர்ந்து எல்லப்பாளையம், பள்ளிபாளையம் மற்றும் கொடுவாய்மேடு பகுதிகளில் வீதி வீதியாகச் சென்ற அமைச்சர் சாமிநாதன், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பங்காம்பாளையம் மற்றும் செட்டிபாளையம் பகுதிகளில் கூடியிருந்த பெண்களிடம், தமிழக அரசின் சாதனைத் திட்டங்களை விளக்கிப் பேசிய அவர், தொகுதியின் வளர்ச்சிப் பணிகள் தொய்வின்றி தொடர தனக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். குறிப்பாக என் காஞ்சிபுரம், வஞ்சிபாளையம் மற்றும் இந்திராநகர் குடியிருப்பு பகுதிகளில் அவருக்குப் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

பிரச்சாரத்தின் இறுதிப் பகுதியில் கவுண்டன்பாளையம் பகுதிக்குச் சென்ற அவர், அங்குள்ள முதியவர்கள் மற்றும் இளைஞர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். கிராமப்புற சாலை வசதிகள், குடிநீர் திட்டங்கள் குறித்துப் பேசிய அமைச்சர், மீண்டும் வெற்றி பெற்றவுடன் விடுபட்ட அனைத்துப் பணிகளும் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார். இந்தச் சுற்றுப்பயணத்தின் போது திமுக நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாகப் பங்கேற்று அமைச்சருடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Right Menu Icon