--- --:--:-- --

இரட்டை தூக்கு தண்டனை அறிவிப்பு.. விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் தீர்ப்பு..!

2

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன் குற்றாவாளி என நீதிமன்றம் என தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் இரட்டை தூக்கு தண்டனை அறிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கடந்த மார்ச் 11ம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

 

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனிஸ்வரன் என்பவரை காவலர்கள் கைது செய்தனர். காட்டுப்பகுதியில் உள்ள காற்றாலையின் சிசிடிவி காட்சியை காவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த வழியாக ஒருவர் பைக்கில் சென்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த பைக்கின் பதிவெண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் அந்த பைக் திருடுபோனது தெரியவந்தது. அந்த பைக்கை திருடிய நபர் குறித்து காவலர்கள் விசாரணை நடத்திய நிலையில், குற்றவாளி பிடிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

 

கைது செய்யப்பட்ட தர்ம முனிஸ்வரன் 2020ஆம் ஆண்டு எட்டயபுரம் அருகே மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் 2022ஆம் கைது செய்யப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் பிணையில் வந்த நிலையில் மீண்டும் கொடூர செயலில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமானது.
இதை தொடர்ந்து தர்ம முனிஸ்வரனை விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

 

இதையடுத்து இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி பிரீத்தா சாட்சிகளிடம் விசாரணை செய்து வந்தார். சாட்சிகளிடம் விசாரணை நிறைவடைந்த நிலையில் சம்பவம் நடந்த 76 நாளில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும் குற்றவாளி தர்ம முனிஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon