மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு..!
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
ஈரான் போர் பதற்றத்தாலும் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பாலும் இன்று அதிரடியாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. அதன் படி இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.46 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.107.77க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.57 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ..99.55க்கும் விற்பனை செய்யப்படுகிறது.ஒரே மாதத்தில் பெட்ரோல் டீசல் விலை 4வது முறையாக உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியவசிய பொருட்கள் விலையும் உயரும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற சூழல் உருவாகியுள்ளது.





