பள்ளிகள் திறப்பை ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் – கம்யூ. கட்சி கோரிக்கை
வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் குழந்தைகள், ஆசிரியர்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால், பள்ளிகள் திறப்பை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தத குறிப்பிடத்தக்கது.





