--- --:--:-- --

தொண்டியில் இன்றும், நாளையும் நடமாடும் பாஸ்போர்ட் சேவை முகாம்

14

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா,  தொண்டியில் இன்றும், நாளையும் (ஜனவரி 20, 21) நடமாடும் பாஸ்போர்ட் அலுவலக சேவை வழங்கப்படவுள்ளது. மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் தற்போது இரண்டு சேவை மையங்களும், 8 தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையங்களும் செயல்பட்டு வருகின்றன.

 

தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாஸ்போர்ட் சேவையை எளிதாக வழங்கும் நோக்கில், வெளியுறவுத் துறை அமைச்சகம் ‘நடமாடும் பாஸ்போர்ட் அலுவலக சேவையை’ தொடங்கியது. மதுரை மண்டலத்தில் இச்சேவை கடந்த ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது.

​தொண்டியில் சிறப்பு முகாம்:

இதன் ஒரு பகுதியாக, ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல் நிலைய வளாகத்தில் இன்றும், நாளையும் (ஜன. 20, 21) பாஸ்போர்ட் சேவை முகாம் நடைபெறுகிறது.

 

* இம்முகாமில் பாஸ்போர்ட் பெற விரும்புவோர் ஆன்லைனில் முன்பதிவு செய்வது அவசியம்.
* ​முன்பதிவு செய்யும் போது, இருப்பிடம் (Location) என்ற பகுதியில் ‘RPO Mobile Van Thondi TN02Ca7837’ என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
* ​முன்பதிவு செய்த அனுமதிச் சீட்டில் (Appointment Receipt) குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில், உரிய ஆவணங்களுடன் நேரில் வந்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.
​இந்தத் தகவலை மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் தெரிவித்துள்ளார்

Right Menu Icon