தீபாவளி விடுமுறைக்குப் பிறகு ரேஷன் பொருட்கள்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!
தீபாவளிப் பண்டிகைக் காக விடப்பட்ட விடுமுறைகள் முடிந்த பிறகு, மக்கள் நவம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்களையும் பெற்றுக் கொள்ளலாம் என்று கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது. பருவமழை தொடங்கிவிட்டதால், மக்கள் நவம்பர் மாதப் பொருட்களை அக்டோபரிலேயே (இப்போது) பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்று (அக்டோபர் 18) சில இடங்களில் இயந்திரக் கோளாறு காரணமாக உணவுப் பொருட்கள் வழங்க முடியவில்லை என்று புகார்கள் வந்தன. இந்தக் குறையைப் போக்கும் விதமாகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




