--- --:--:-- --

தமிழகத்தில் 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்!

4

மிழ்நாடு அரசு, நிர்வாகத்தின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன், பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்த 7 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்துள்ளது. தலைமைச் செயலாளர் முருகானந்தம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

 

இந்த இடமாற்றங்களின்படி, பல்வேறு முக்கியப் பொறுப்புகளுக்கு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்: உள்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை கூடுதல் செயலாளராக இருந்த வெங்கட் பிரியா, இனி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளராக பணியாற்றுவார்.

 

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த பானோத் ம்ருகேந்தர், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக எஸ். பிரியங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

 

பொது மற்றும் மறுவாழ்வுத் துறையின் சிறப்புச் செயலாளராக இருந்த சஜ்ஜன்சிங் ரா சவான், இனி திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் செயலாளராகப் பொறுப்பேற்பார்.

 

சமூக நலத்துறை இயக்குனரகத்தின் கூடுதல் இயக்குநராக சரண்யா அரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் செயல் அலுவலராக ஸ்வேதா சுமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Right Menu Icon