நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய கேரள ஐகோர்ட் தடை
ஐ.டி. ஊழியர் கடத்தி தாக்கிய வழக்கில் நடிகை லட்சுமி மேனனுக்கு முன் ஜாமின் வழங்கியது கேரள உயர்நீதிமன்றம். செப்.17-ம் தேதி வரை அவரை கைது செய்ய தடைவிதித்துள்ளது.
மதுபான பாரில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து ஐ.டி. ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டதாகவும், பின்னர் கடத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இந்தக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் நடிகை லட்சுமி மேனன் என குற்றம்சாட்டப்பட்டது.





