ராமேஸ்வரம் மீனவர்கள் 2-வது நாளாக ஸ்டிரைக்..!
மீனவர்கள், படகுகளை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் நேற்று முதல் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கினர். இதனால் ராமேசுவரம் துறைமுக கடல் பகுதியில் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கவும், படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் 20வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.





