கர்ப்பிணியை காப்பாற்ற ஆம்புலன்ஸ் ஓட்டிய பெண் மருத்துவர்
ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் விடுப்பில் இருந்ததால் கர்ப்பிணியை காப்பாற்றிய பெண் மருத்துவர் ஆம்புலன்சை ஓட்டிச் சென்ற சம்பவம் மேகாலயாவில் நடந்துள்ளது. பெண் மருத்துவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேகாலய மாநிலத்தில் உள்ள சுகாதார நிலையத்தில் பணியாற்றி வருபவர் இவர். அந்த பகுதியை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
உடனடியாக அவரை பரிசோதனை செய்த இவர் கர்ப்பிணிக்கு உயர் சிகிச்சை தேவை என நினைத்துள்ளார். ஆனால் அந்த சுகாதார நிலையத்தில் போதுமான வசதிகள் இல்லை. காலம் தாழ்த்தாமல் உடனடியாக கற்பனையை வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முடிவெடுத்துள்ளார். ஆனால் அன்றைய தினம் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் விடுமுறையில் இருந்துள்ளனர் .

ஆம்புலன்ஸ் சேவையை உடனடியாக கிடைக்காத நிலையில் மற்றும் வாகனத்தில் கர்ப்பிணியை அனுப்பவும் மருத்துவருக்கு மனமில்லை உடனடியாக தானே ஆம்புலன்ஸ் ஓட்டுவதற்கு முடிவு செய்துள்ளார். இவர் கர்ப்பிணியை ஆம்புலன்ஸில் ஏற்றி கொண்டு முப்பது கிலோமீட்டர் தூரம் தானே ஓட்டிச் சென்ற மருத்துவர் சரியான நேரத்தில் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இதுகுறித்து பேசிய டாக்டர் அதனிடம் ஓட்டுனர் உரிமம் இருந்ததால் துரிதமாக செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
யாருக்காகவும் காத்திருக்காமல் கற்பனைக்கு நலனை கருத்தில் கொண்டு துரிதமாக செயல்பட்ட மருத்துவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் பெண் காவலர் ஒருவர் கர்ப்பிணிப் பெண்ணுக்கு அவசர உதவியாக பிரசவம் பார்த்த சம்பவம் நினைவிருக்கலாம்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




