வாழ்நாளில் ஒரே ஒருமுறை மட்டுமே பூத்துக்குலுங்கும் அதிசய மலர்

மலைகளின் இளவரசியாக போற்றப்படும் கொடைக்கானலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூத்துக் குலுங்கும் குருமார்களை பார்த்து ரசித்தவர்களுக்கு மேலும் விருந்து அளிக்கும் விதமாக ஆங்காங்கே அன்ன கற்றாழை பூக்கள் பூத்துக் குலுங்கி நிற்கின்றன. தன் வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே பூத்துக் குலுங்கும் நீல கற்றாழை அல்லது அந்த கற்றாழை பூ தற்போது கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நிற்கின்றன.

 

மத்திய மெக்சிகோவை பூர்வீகமாகக் கொண்ட இந்த பூ நீல கற்றாழை பேர் இனத்தைச் சேர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த பூக்கள் சுமார் 8 முதல் 10 அடி வரை வளர்ந்து அன்னப் பறவையின் கழுத்து போன்று வளைவதால் இதனை அன்ன கழுத்து பூ என்று அழைக்கின்றனர்.

 

தோட்டங்கள் மற்றும் பூங்காக்களில் அலங்கார தாவரமாக வளர்க்கப்படும் நீல கற்றாழையின் மலர்கள் வெளி பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் நிறமாக மாறும் தன்மை கொண்டது. தற்போது கொடைக்கானல் காவல் நிலைய வளாகத்தில் தூத்துக்குடி நிற்கும் அன்ன கழுத்து பூவை பலரும் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.


Leave a Reply