--- --:--:-- --

உணவகத்தில் வாங்கிய பிரியாணியில் திறந்த நிலையில் கிடந்த பல்லி..!

7

சென்னை குறுக்குப்பேட்டையில் உள்ள பிஸ்மி பிரியாணி உணவகத்தில் இருந்து ஹேமச்சந்திரன் என்பவர் வண்ணாரப்பேட்டையில் உள்ள உறவினர் ராஜ்குமார் வீட்டுக்கு வாங்கி சென்ற மூன்று சிக்கன் பிரியாணி பார்சலை குடும்பத்தினர் சாப்பிட்டுள்ளனர்.

 

அதில் சுவாதி என்பவர் சாப்பிட திறந்த நிலையில் பல்லி ஒன்று இருந்ததாக கூறப்படுகிறது. பிரியாணியை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அனைவருக்கும் வாந்தி, தலைசுற்றல் ஏற்பட்டு ஸ்டாண்ட்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இருந்தனர்.

 

பல்லி கிடந்த பிரியாணி பார்சல் உடன் உணவகத்திற்கு சென்று விளக்கம் கேட்ட பொழுது உணவகத்தினர் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. உணவகத்தின் மீது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon